×

நாசரேத்தில் விளையாட்டு போட்டிகள்

நாசரேத், ஜன. 23: நாசரேத் 2வது ஐசக் தெருவில் தமிழர் திருநாளை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. நகர வியாபாரிகள் சங்க இணை செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற தாசில்தார் அய்யாக்குட்டி, ஓய்வுபெற்ற பேராசிரியர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர், சிறுமியர், வாலிபர்கள், பெரியோர்களுக்கு மாறுவேடப்போட்டி, பானை உடைத்தல், பலூன் உடைத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அப்பலோஸ், பிரவீன் குமார், அருண் மந்திரம், ராஜேஸ்வரன், மகாராஜன், பபீமணி, செயின்ட் ராஜா, ஸ்டீபன், பிரபா, வேலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post நாசரேத்தில் விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Nazareth ,2nd Isaac Street, Nazareth ,Purushothaman ,City Merchants Association ,Tahsildar Ayyakutty ,
× RELATED ஓய்வூதியர் தின விழா