- ரகுல்கந்தி
- ஈரோடு
- அசாம் மாநில கவாதா
- ரகுலகந்தி
- காங்கிரஸ்
- காங்கிரஸ் கட்சி
- ஈரோடு சூரம்பட்டி தெற்கு காவல் நிலையம்
- ராகுல்கந்தி
ஈரோடு: ராகுல்காந்தி எம்பி மீது அசாம் மாநிலம் கவுகாத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு சூரம்பட்டி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: பேச்சு, எழுத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் போடும் வகையில் வழக்கு போட்டு வருகின்றனர். யாராக இருந்தாலும் அநீதியை தட்டிக்கேட்கும் தலைவராக ராகுல்காந்தி உள்ளார். அவர் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தால் நாட்டு மக்கள் போராடுவார்கள். கோமியம் குடிக்கும் அவர்களுக்கே இவ்வளவு இருந்தால், இந்த தேசத்திற்காக வாழும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும். பாஜ அரசு ராகுல்காந்தி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.
The post ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செல்வபெருந்தகை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
