×

திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு விலையில்லா பேருந்து சேவை: அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு இயக்கப்படும் விலையில்லா பேருந்து சேவையை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று துவக்கி வைத்தார். முருகப்பெருமானின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க, திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, மலைக்கோயிலுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய, வந்து செல்ல ஏதுவாக, விலையில்லா பேருந்து சேவை தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

மாநில பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேருந்து சேவையை புதன்கிழமை துவக்கி வைத்தார். மேலும்,திருத்தணிக்கு செல்ல பயன்படுத்தப்பட உள்ள மாற்று சாலையையும் இன்று அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு விலையில்லா பேருந்து சேவை: அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruttani railway station ,Minister ,E.V.Velu ,Tiruttani ,Public Works ,Tiruttani Murugan Temple ,Lord ,Muruga ,Minister E.V.Velu ,
× RELATED ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை...