×

ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது அன்புமணி கோஷ்டி: ஸ்ரீகாந்தி தாக்கு

சேலம்: ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது அன்புமணி கோஷ்டி என ஸ்ரீகாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இத்தகைய கூட்டத்தில் தலைவராக ராமதாஸ், கௌரவத் தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக ஸ்ரீகாந்தி, பொதுச் செயலாளராக முரளி சங்கர் ஆகியோரை அங்கீகரித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி பேச்சு நடத்த ராமதாஸுக்கே அதிகாரம்

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் பாமக சார்பில் கூட்டணி பேச்சு நடத்த ராமதாஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. வேட்பாளர்களை தேர்வு செய்து சின்னம் ஒதுக்கும் A, B படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. கடிதங்களில் கையெழுத்திடும் முழு அதிகாரத்தை ராமதாஸுக்கு செயற்குழு வழங்கி தீர்மானம். பாமக தலைவராக ராமதாஸை நியமித்து பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

சவுமியா அன்புமணி நீக்கம்

பசுமைத் தாயகம் அமைப்பில் இருந்து சவுமியா அன்புமணி நீக்கம் செய்யப்பட்டு. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டார். பின்னர் பேசிய அவர்,

அன்புமணி அணிந்துள்ள கோட் யார் கொடுத்தது

ராமதாஸை கேள்வி கேட்க நீங்கள் யார்? என்று அன்புமணிக்கு ஸ்ரீகாந்தி கேள்வி எழுப்பினார். அமைச்சர் பதவி, எம்.பி. பதவி அனைத்தையும் உழைத்து வாங்கினீர்களா. எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை. அன்புமணி அணிந்துள்ள கோட் யார் கொடுத்தது. பாமகவை கண்டுகொள்ளாமல் நான்தான் தலைவர் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அன்புமணி மீது ஸ்ரீகாந்தி கடும் தாக்கு

நாடாளுமன்ற கூட்டத்துக்கு 15 சதவீத நாட்களே சென்றுள்ளார் அன்புமணி இதற்கு பெயர் உழைப்பா என்று ஸ்ரீகாந்தி கடும் தாக்கு. அன்புமணி செய்தது பச்சை துரோகம். யாருடன் கூட்டணி? யாருக்கு சீட் என்ற வியூகத்தை ராமதாஸ் வகுத்துவிட்டார்.

ஏ.சி. கார் யார் கொடுத்தது?

பாமகவை கண்டுகொள்ளாமல் நான்தான் தலைவர் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அன்புமணி போகும் ஏ.சி. கார் யார் கொடுத்தது?. “யாரடா நீங்கள்” என்று அன்புமணியையும் அவரது ஆதரவாளர்களையும் சாடினார்.

ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்

ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்.ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை வைத்து அன்புமணி கோஷ்டி அரசியல் செய்ய நினைக்கிறது.

ராமதாசுக்கு மக்கள், மண் மீதுதான் பைத்தியம்

ராமதாசுக்கு மக்கள் மற்றும் இந்த மண் மீதுதான் பைத்தியம்.

துரோகிகளும் சுயநலவாதிகளும் சென்றுவிட்டனர்

துரோகிகளும் சுயநலவாதிகளும் சென்றுவிட்டனர். விசுவாசிகள் மட்டுமே உள்ளனர்.

ராமதாஸின் ஆட்டத்தை இனிதான் பார்க்க போகிறீர்கள்

ராமதாஸின் ஆட்டத்தை அன்புமணியின் கோஷ்டி இனிமேல்தான் பார்க்கப் போகிறது.

அன்புமணியின் ஆதரவாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அடிமைகள்

அன்புமணியின் ஆதரவாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அடிமைகள். பாமக என்பது ராமதாஸ் கட்டிய கோட்டை, இங்கு அவர்தான் ராஜா என தெரிவித்தார்.

 

Tags : Ramadas ,Anbumani Ghoshdi ,Srikanti Attack ,Salem ,Palamaha ,Ramdas ,WEDDING HALL ,PANAMAKA GENERAL ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை,...