×

இந்தோனேஷியா பேட்மின்டன்: இந்திய வீரர்கள் வெற்றி


ஜகர்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனைகள் தனிஷா கிராஸ்டோ- அஸ்வினி பொன்னப்பா இணை, தாய்லாந்து வீராங்கனைகள் ஒர்னிச்சா ஜோங்சாதபோர்ன்பார்ன்- சுகித்தா சுவாசாய் இணையுடன் மோதியது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனைகள், 21-6, 21-14 என்ற நேர் செட்களில் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீன தைபேவின் செங் ஸிரே-லின் யு சியெ இணையுடன் மோதி அபார வெற்றி பெற்றது.

The post இந்தோனேஷியா பேட்மின்டன்: இந்திய வீரர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Jakarta ,Indonesia Masters Badminton Women's Doubles ,Tanisha Krasto ,Ashwini Ponnappa ,Ornicha Jongsadapornporn ,Sukita Suwasai ,Dinakaran ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...