- எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- Kengavalli
- வீரகனூர் ஊராட்சி
- தலைவாசல்
- வீரகனூர்
- எம்.ஜி.ஆர்
- சேலம் புறநகர் மாவட்டம்
- எலங்கோவன்
- ஆத்தூர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜெயசங்கரன்
- யூனியன்
- செயலாளர்கள்
- சந்திரசேகர்
- ராமசாமி
- தின மலர்
கெங்கவல்லி, ஜன.21: தலைவாசல் அடுத்த வீரகனூர் பேரூராட்சியில், எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வீரகனூர் பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஆத்தூர் எம்எல்ஏ ஜெயசங்கரன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், ராமசாமி, கூடமலை ராஜா, ரமேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அமைப்பு செயலாளர் ராமு, தலைமை கழக பேச்சாளர் மணிமேகலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து பேசினர். அதை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில், ‘2026ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும். அதற்கு அதிமுக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும். கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட வேண்டும்,’ என்றார். கூட்டத்தில், பேரூர் செயலாளர்கள் ராஜேந்திரன், இளவரசு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.
