×

ஆயுதப்படை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம்: எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநராக நியமனம்

சென்னை: தமிழக ஆயுதப்படை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பு படையின் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை ஆயுதப்படை டி.ஜி.பி.யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் தற்போது, மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மகேஷ்குமார் அகர்வால் இந்த பதவியில் 4 ஆண்டுகள் வரை இருப்பார் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடித்ததில், மகேஷ்குமார் அகர்வாலை தமிழக பணியில் இருந்து உடனடியாக விடுவித்து மத்திய அரசு பணியில் சேர வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 1994ம் ஆண்டு பிரிவை சேர்ந்த தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி.,யாக பணியாற்றிவர், பின்னர் 2001ம் ஆண்டு சென்னைக்கு மாற்றப்பட்டு பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர் பதவிகளில் இருந்தவர். சி.பி.ஐ. அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 2020ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர்.

The post ஆயுதப்படை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம்: எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநராக நியமனம் appeared first on Dinakaran.

Tags : Armed Forces ,DGP ,Mahesh Kumar Agarwal ,Border Security Force ,Chennai ,Tamil Nadu Armed Forces ,Union ,ADGP ,Tamil Nadu Police Armed Forces ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி