×

தலைமறைவாக இருந்தவர் கைது

அரூர், ஜன.19: அரூரில் சந்தன மரம் வெட்டிய வழக்கில், ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை வனத்துறையினர் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அரூர் வனத்துறை அலுவலகத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 8 சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தியது. அப்போது 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 4 பேருக்கு ₹1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அரூர் பாளையத்தை சேர்ந்த குமார்(40) என்பவரை, நேற்று அரூர் வனச்சரகர் நீலகண்டன் பிடித்து, மாவட்ட வனஅதிகாரி ராஜாங்கம் உத்தரவின் பேரில், அரூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தினார். அவரை நீதிபதி அரூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Arur ,Arur Forest Department ,
× RELATED ஓய்வூதியர் தின விழா