×

ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம்

பாப்பாரப்பட்டி, ஜன.17: பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி சத்திரம் தெருவில் உள்ள ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி திருவிழா நடைபெற்றது. சபரிமலை மேல் சாந்தி மனோஜ் நம்பூதிரி தலைமையில் நடைபெற்ற மகரஜோதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதி தரிசனம் செய்தனர். விழாவில், அகில பாரத சன்னியாசிகள் சங்கத் தலைவர் மத் ராமானந்தர் சுவாமிகள் கலந்து கொண்டார். காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Makara Jyothi Darshan ,Ayyappan Temple ,Papparapatti ,Makara Jyothi festival ,Papparapatti Chatram Street, Pennagaram Taluk ,Sabarimala ,Mel Shanthi Manoj Namboothiri ,Makara Jyothi Darshan.… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா