×

கரூர் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா

 

கரூர், ஜன. 14: வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் கொங்கு மாமணி அட்லஸ் எம்.நாச்சிமுத்து தலைமையேற்று துவக்கி வைத்தார். முன்னதாக பள்ளியின் தாளாளர் பாலுகுருசுவாமி வரவேற்றார். இவ்விழாவில் அறக்கட்டளையின் செயலாளர் விசா ம.சண்முகம் அறக்கட்டளையின் துணைதலைவர் சங்கம் ஆர். மனோகரன் அறக்கட்டளை இணைச்செயலாளர் எஸ்.சேதுபதி மற்றும் நிர்வாகசபை அங்கத்தினர்கள் ஆகிய சேகர், சங்கீதா பாலசுப்பிரமணியன், பால் பண்ணை ராஜாமணி பழனிச்சாமி, வசந்தம் ராமசாமி கலந்துகொண்டனர். இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பானை உடைத்தல், பந்து எறிதல் மியூசிக்சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 1500 மாணவ மாணவிகள் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

The post கரூர் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Vennaimalai Kongu Higher Secondary ,School ,Karur ,Pongal ,Vennaimalai Kongu Higher Secondary School ,Kongu Educational Trust ,Kongu Mamani Atlas M. Nachimuthu ,Baluguruswamy ,Vennaimalai Kongu ,Higher Secondary School ,
× RELATED கால்நடைகளில் உண்ணிகள் கட்டுப்படுத்தும் முறைகள்