×

திருவாரூரில் நடந்த தடகளப்போட்டியில் தஞ்சை சரக ஊர்க்காவல் படையினர் வெற்றி

*எஸ்பி கருண் கரட் பரிசு வழங்கினார்

திருவாரூர் : தஞ்சை சரக ஊர்க்காவல் படையினருக்காக திருவாரூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை எஸ்.பி கருண் கரட் வழங்கினார்.

தஞ்சை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஊர்காவல் படை வீரர்கள்மற்றும் வீராங்கனைகளுக்கான விளையாட்டு போட்டியானது திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கைப்பந்து போட்டிகள், கபாடி போட்டிகள், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை எஸ்.பி கருண் கரட் வழங்கி பேசுகையில், விளையாட்டு என்பது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளக் கூடியதாகவும், இது மட்டுமின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் விளையாட்டு உதவும் என்பதால் அனைவரும் அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எஸ்.பி கருண்கரட் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பழனிச்சாமி மற்றும் ஊர்க்காவல் படை கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் நடந்த தடகளப்போட்டியில் தஞ்சை சரக ஊர்க்காவல் படையினர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Tanjay Saraka Urkaval ,Thiruvaroor ,SP Karun Karat ,Thanjay Saraga Urkaval ,Karun Karat ,Thanjavur ,Thiruvarur ,Nagai ,Tanjay Police ,Thanjai Saraka Urkaval Troops ,Dinakaran ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...