- சத்தியமங்கலம் புலி காப்பகம்
- சத்தியமங்கலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டி.என். பாளையம்
- பவானி சாகர்
- விஜா முண்டி
- கடம்பூர்
- தலமலை
- Asanur
சத்தியமங்கலம் : தமிழ்நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், டி.என். பாளையம், பவானிசாகர், விழா முண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்தேக்கப் பகுதிகளில் அதிநவீன கேமராக்கள், பைனாகுலர் பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறியதாவது:பருவமழையின் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு அதிகம் உள்ளதால் ஈர நில பறவைகளின் வருகை அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. கணக்கெடுப்பு பணியின் போது மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வலசை வந்துள்ளன.
ஊசிவால் வாத்து, தட்டைவாயன், கிளுவை, வெண் புருவ வந்து, மண்கொத்தி,பச்சை காலி, விசிவிசிறிவால் உள்ளான்,சேற்றுப் பூனைப்பருந்து, மஞ்சள் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டது. தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
