×

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று இடைக்கழிநாட்டில் சமத்துவ பொங்கல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா இன்று காலை 10 மணி அளவில் இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, 48 திமுகவினருக்கு நூற்றாண்டு நாணயம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, விளையாட்டுக் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணம், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்கி சிறப்பிக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். இளைஞர் அணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அனைவரையும் வரவேற்கிறார். மாவட்ட அவை தலைவர் இனியரசு, துணை செயலாளர் கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், இளைஞர் அணி நிர்வாகிகள் மணி, பால்ராஜ், சஞ்சய் காந்தி, அருள் முருகன், ஆண்டோ சிரில் ராஜ், யுவராஜ், சுகுமார் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் நன்றி கூறுகிறார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு, இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கிராமத்தில் இசிஆர் சாலையை ஒட்டி 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்டமான முறையில் இருக்கைகளும் தமிழரின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகை குறிக்கும் பதாகைகளும் விழா மேடையும் அமைக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி ப.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நாகன், நாராயணன், ஆர்.டி.அரசு, தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், சாலவாக்கம் குமார், கண்ணன், தம்பு, சத்திய சாய், சிவக்குமார், ராமச்சந்திரன், பாபு, ஏழுமலை, சிற்றரசு, சரவணன், குமணன், குமார், சேகர், மோகன்தாஸ், எழிலரசன், சுந்தரமூர்த்தி, பாரிவள்ளல், பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, ராஜேந்திரன், உசேன், சசிகுமார், எழிலரசி சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார், மாணவர் அணி அமைப்பாளர் குணசேகரன், சரளா தனசேகரன், சரண்ராஜ், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ரஞ்சித், மீனவர் அணி அமைப்பாளர் பாரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மேடை பகுதியை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். மேலும் நிகழ்ச்சிக்கு வரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, மகளிர் அணி, விவசாய அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட அணிகளைச் சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் இடைக்கழிநாடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

 

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று இடைக்கழிநாட்டில் சமத்துவ பொங்கல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram South District DMK ,Samathuva Pongal ,Idakkalinadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Kanchipuram ,Tamil New Year ,Tamilar Thirunal Samathuva Pongal festival ,Kappivakkam Kalaignar Thidal ,Tamil Nadu ,Deputy ,Chief Minister… ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...