×

கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் விலகல்

பண்ருட்டி: நாதகவில் இருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் தற்போது கடலூர் கிழக்கு மாவட்ட நாதக மாவட்ட தலைவர் மகாதேவன் தனது ஆதாரவாளர்களுடன் நேற்று கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன விடுதலை அரசியல் என்று இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கு மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன். இன்றோடு நாதகவில் இருந்து விலகுகிறேன். இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

The post கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் விலகல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Eastern District ,Nathaka ,Panruti ,Nathaka District ,Mahadevan ,Cuddalore East District ,Nataga ,Nathaka Chairman ,Dinakaran ,
× RELATED கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் விலகல்