×

விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். போதைப் பொருட்கள் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகளில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அபாராதம் மற்றும் கடைகளின் உரிமம் ரத்து செய்த விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னையிலிருந்து திருமழிசை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களில் உள்ள மணலை அள்ளி சீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்கள் மாவட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் மனு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மூர்த்தி, மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், பொன்னேரி சப்-கலெக்டர் வாஹே சங்கத் பல்வந்த், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம், தீபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

The post விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur Collectorate ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை...