×

2026 மார்ச் மாதம் ரயில் சக்கரம் உற்பத்தி: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

திருவள்ளூர்: புதுவாயலில் ரயில் சக்கரம் தொழிற்சாலை கட்டுமான பணியை ஆய்வுசெய்த பிறகு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிகவேகத்தை தாங்கும் ரயில் சக்கரம் உற்பத்தி தொழிற்சாலை 2026 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும். 80000 சக்கரங்கள் இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள சக்கரங்கள் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உற்பத்தி திறன் கொண்ட இரும்பு அச்சு முறை மூலம் உருவாக்கப்படும். ரயில் சக்கரங்களை மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல துறைமுகங்களுக்கு அருகிலேயே தயாரிக்கப்படவுள்ளது என்று கூறினார்.

 

The post 2026 மார்ச் மாதம் ரயில் சக்கரம் உற்பத்தி: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Aswini Vaishnav ,THIRUVALLUR ,PUDUVAI ,Rail Wheel Production ,Dinakaran ,
× RELATED விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்