திருத்துறைப்பூண்டி, ஜன.9: பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடைகளில் சோதனை நடத்தி அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர், திருத்துறைப்பூண்டியில் நகராட்சி ஆணையர் துர்கா, சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அழகுவேல், கிராம நிர்வாக அலுவலர் குமார் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு பகுதிகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்களை தீயிட்டு அழித்தனர். அப்போது போலீசார் வருவாய்த் துறையினர் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post திருத்துறைப்பூண்டியில் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.