×

திருவாரூர் புத்தக கண்காட்சிக்கு ₹10 ஆயிரம் நன்கொடை

 

திருத்துறைப்பூண்டி, ஜன. 10: திருவாரூரில் மூன்றாவது கண்காட்சி இந்த மாதம் நடக்கிறது. திருவாரூர் ஆட்சியரக கூட்ட அரங்கில் புத்தக கண்காட்சி விழா நடைபெறுவது தொடர்பான ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடந்தது. திருவாரூர் ஆட்சியர் சாரு  தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற 3வது புத்தகக் கண்காட்சி திருவிழாவிற்கு திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனங் களின் சார்பில் அதன் நிறுவனர் எடையூர் மணிமாறன், புத்தக கண்காட்சிக்காக ரூ.10 ஆயிரம் நன்கொடையினை மாவட்ட கலெ க்டரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அனைத்து வட்டாரங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பிற அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் புத்தக கண்காட்சிக்கு ₹10 ஆயிரம் நன்கொடை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Book Fair ,Thiruthuraipoondi ,Tiruvarur ,Thiruvarur Collectorate Assembly Hall ,Tiruvarur Collector ,Saru ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புகையிலை...