×

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வலங்கைமானில் 262 வீடுகள் கட்டும் பணி மும்முரம்

 

வலங்கைமான், ஜன. 10: தமிழக அரசு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிக்காக கம்பி, சிமென்ட் வழங்கி வருகிறது. தமிழக மக்களின் நலன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஊரக பகுதியில் உள்ள கூரை வீடுகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான, நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டி தருவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி கூரை, சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை மக்களை கண்டறிந்து ஊரக வளர்ச்சி முக மை மூலமாக வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்படுகிறது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆதிச்சமங்கலம், மாணிக்கமங்கலம், அரித்துவாரமங்கலம், வீரமங்கலம், திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் தகுதியான 262 பயனாளிகள் தேர்வு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணி தடையின்றி நடைபெறும் வகையில் கம்பி, சிமென்ட் ஆகியவை தமிழக அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வலங்கைமான் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, செந்தில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். வீடு கட்டும் பணிக்கு தேவையான கம்பி, சிமென்ட் ஆகியவற்றை தமிழக அரசு தடையின்றி வழங்கி வருகிறது.

 

The post கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வலங்கைமானில் 262 வீடுகள் கட்டும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Muammuram ,Valangaiman ,Tamil Nadu government ,Chief Minister of Tamil Nadu ,Tamil Nadu ,K. Stalin ,
× RELATED வலங்கைமான் அருகே பழுதடைந்த பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும்