- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- புதுக்கோட்டை
- நெடுஞ்சாலைகள் துறை
- புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு மாதம்
- புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம்
- கலெக்டர்
- எம் அருணா
- தின மலர்
புதுக்கோட்டை, ஜன.9: புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை ஆட்சியர் எம்.அருணா தொடங்கி வைத்தார். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குறியீடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கும் வகையிலான விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார்.
அங்கிருந்து தொடங்கிய பேரணியானது ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக டிவிஎஸ் கார்னரை அடைந்தது. அப்போது, சாலை பாதுகாப்பை கடைபிடிக்கும் விதமாக அவ்வழியே தலைக்கவசம் அணிந்து சென்றோருக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோட்டப் பொறியாளர் தமிழழகன், கோட்டாட்சியர்.ஐஸ்வர்யா, காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.