×

சபரிமலை அரவணப் பாயாசம்

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி – 200 கிராம்,
வெல்லம் – 1 கிலோ,
தண்ணீர் – தேவையான அளவு,
நெய் – 250 மில்லி,
ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும். அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும். பின்னர் அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

The post சபரிமலை அரவணப் பாயாசம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரிம்