×

தேங்காய்ப்பூ கேக்

தேவையானவை:

முற்றிய தேங்காய்த்துருவல் – 4 கப்,
சர்க்கரை – 400 கிராம்,
ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
நெய் – 200 கிராம்,
பொடித்த முந்திரி – 2 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் தேங்காய்த்துருவலை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து பாகுபதம் வரும் போது அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய்த்துருவலைப் போட்டு கைவிடாமல் கிளறவும். நன்றாக திரண்டு வரும்போது நெய்யை ஊற்றிக் கிண்டவும். கேக் பதம் வந்ததும் ரோஸ் எசென்சை ஊற்றி நெய் தடவி தாம்பாளத்தில் கொட்டவும். மேலே பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய்த் தூவி அலங்கரிக்கவும். ஆறியபின் வில்லைகள் போடவும். இதுவே ‘தேங்காய்ப்பூ கேக்.’ செலவும் குறைவு. செய்வது எளிது. சுவை மிகுந்த கேக்.

The post தேங்காய்ப்பூ கேக் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வேப்பம் பூ காரக்குழம்பு