×

சுட்ட கத்தரிக்காய் ஆட்டுத் தலை காரக் கறி

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ
ஆட்டுத் தலைக் கறி – 1
சின்ன வெங்காயம் – 150கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
இலவங்கம் – 7
கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
தனியா – 4 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 4
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி கீரை – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 குழிக் கரண்டி
உப்பு தேவையான அளவு.

செய்முறை

கத்தரிக்காயை சுத்தம் செய்து நல்லெண்ணெய் தடவி நெருப்பில் சுட்டு தோலுரித்து மசித்து வைக்கவும். ஆட்டுத் தலை கறியை ஒரு குழிக் கரண்டி எண்ணெய் விட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் சோம்பு, பட்டை, இலவங்கம், கசகசா, காய்ந்த மிளகாய் மற்றும் தனியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து அரைத்து வைக்கவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை கொரகொரவென்று அரைத்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு வேக வைத்த கறியை சேர்த்து இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது மசித்து வைத்த கத்தரிக்காயை சேர்த்து கிளறவும். பிறகு வறுத்து அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து கிளறவும். கொத்தமல்லிக் கீரை தூவி இறக்கவும். சுவையான சுட்ட கத்தரிக்காய் ஆட்டுத் தலை காரக் கறி தயார்.

The post சுட்ட கத்தரிக்காய் ஆட்டுத் தலை காரக் கறி appeared first on Dinakaran.

Tags :
× RELATED சபரிமலை அரவணப் பாயாசம்