தேவையானவை:
வாழைத்தண்டு நறுக்கியது – 1 கப்,
துவரம் பருப்பு – 50 கிராம் (வேகவிட்டு இரண்டு கப் நீர் சேர்த்து விளாவிய பருப்பு நீர்),
பூண்டு – 4 பற்கள்,
இஞ்சி – ஒரு துண்டு,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் பொடி – ½ டீ்ஸ்பூன்,
மிளகு+சீரக பொடி – 2 டீஸ்பூன்,
நறுக்கிய தக்காளி – 2,
எலுமிச்சை பழம் – 2,
நறுக்கிய மல்லி – சிறிது.
தாளிக்க:
நெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் – தலா ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
வாழைத்தண்டை ½ கப் நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, பருப்பு நீருடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி, ரசப்பொடி கலந்து ரெடியாக்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, தாளிக்கும் பொருள் தாளித்து இஞ்சி, பூண்டு கலவை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதங்கி வருகையில் மிளகு, சீரகப்பொடி, வாழைத்தண்டு, பருப்பு நீர் கலவை சேர்க்கவும். லேசாக நுரைத்து வருகையில் இறக்கி, மல்லி மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும். இதை காலையில் செய்து மாலையில் சாப்பிடுவதை விட உடனுக்குடன் செய்து பரிமாறவும்.
The post வாழைத்தண்டு லெமன் ரசம் appeared first on Dinakaran.