×

வேலூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து

வேலூர், ஜன.8: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து வேலூரில் நேற்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மாநில உரிமைகளை சிதைக்கும் வகையிலும், மாநில சுயாட்சியை பாதிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு வழங்கும் உரையை படிக்காமல் தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் முபாபு, மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் வி.எஸ்.விஜய், ஞானசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தேவராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிபாஸ்கர், ஒன்றிய திமுக செயலாளர்கள் ஞானசேகரன், கஜேந்திரன், பகுதி செயலாளர்கள் ஐயப்பன், சுந்தரவிஜி, பாலமுரளி, கணேஷ்சங்கர், முருகபெருமாள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post வேலூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து appeared first on Dinakaran.

Tags : DMK ,Vellore ,Tamil Nadu ,Governor ,R.N. Ravi ,Tamil ,Nadu ,Tamil Nadu Legislative Assembly ,Governor R.N. Ravi ,
× RELATED ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின்...