×

அதி நவீன ஏஐ தொழில் நுட்ப கேமரா பொருத்தி சிறுத்தை கண்காணிப்பு கலெக்டர் ஆய்வு சிறுத்தை தாக்கி பெண் பலி எதிெராலி

குடியாத்தம், ஜன. 8: கே.வி.குப்பத்தை அடுத்த துருவம் கிராமத்தில் கடந்த மாதம் வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் சிறுத்தை தாக்கியதில் அஞ்சலி என்ற பட்டதாரி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திது. இந்நிலையில், குடியாத்தம் அருகே வீரிசெட்டிபள்ளி, அனுப்பு, காந்தி கணவாய் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தை தாக்கியதில் ஆடு கோழி கன்று குட்டி, காந்தி கணவாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கி பசு பலியானது. பரதராமி, அனுப்பு, காந்தி கணவாய், மோடிகுப்பம் , மோர்தானா , ரங்கசமுத்திரம் , பேரணாம்பட்டு உள்ளிட்ட வன பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தகவல் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மேலும்சிறுத்தை நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள காந்தி கணவாய் பகுதியில் சிறுத்தையை கண்காணிக்க ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 24 மணி நேரமும் வனப்பகுதியில் வரும் உயிரினங்களை பதிவு செய்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வாட்ஸ் அப்பில் பதிவுகளை அனுப்பும். இந் நிலையில் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, ஆர்டிஓ சுபலட்சுமி குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய் கிராம வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபாவுக்கு உத்தரவிட்டார்.

The post அதி நவீன ஏஐ தொழில் நுட்ப கேமரா பொருத்தி சிறுத்தை கண்காணிப்பு கலெக்டர் ஆய்வு சிறுத்தை தாக்கி பெண் பலி எதிெராலி appeared first on Dinakaran.

Tags : K. V. ,Anjali ,Veerisettischool ,Manpu ,Gandhi ,Antelali ,
× RELATED 2024ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர்...