×

கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு தீயணைப்பு வீரரர்கள் அணைத்தனர் காட்பாடியில் நடுரோட்டில்

வேலூர், ஜன.9: காட்பாடியில் நடுரோட்டில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர் (40). இவர் நேற்று காலை காட்பாடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக நண்பர்களுடன் தனது காரில் வந்துள்ளார். கார் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் இன்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை வெளியேறி உள்ளது. இதைப் பார்த்த ஸ்ரீதர் காரை உடனடியாக ஓரமாக நிறுத்தி உள்ளார்.

காரில் இருந்து அனைவரும் இறங்கிய நிலையில் இன்ஜின் பகுதியில் பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதையடுத்து காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீணையப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான 5 பேர் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். எரிந்து கொண்டு இருந்த காரை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் அவ்வழியாக போக்குவரத்து சிறிது நேரம் தடை செய்ய்பபட்டது. இதனால் சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு தீயணைப்பு வீரரர்கள் அணைத்தனர் காட்பாடியில் நடுரோட்டில் appeared first on Dinakaran.

Tags : Kadpadi Nadurot ,Vellore ,Nadurot ,Kadpadi ,Dar ,Thiruvallur district ,
× RELATED ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர்...