- வேலூர் மாவட்டம்
- அக்னிவிர் எரிவாயு விமானப்படை
- வேலூர்
- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- இந்திய விமானப்படை
- மாவட்டம்
- தின மலர்
வேலூர், ஜன.7: வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயன் பெறலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப் படையின் (மருத்துவ உதவியாளர் பிரிவு) ஆட்சேர்ப்பு பணி வரும் 29ம் தேதி, 1ம் மற்றும் 4ம் தேதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மகாராஜா கல்லூரி மைதானம், பி.டி. உஷா சாலை, எர்ணாகுளம், கேரளா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இந்திய விமானப் படையின் (மருத்துவ உதவியாளர் பிரிவு)) ஆட்சேர்ப்பில் கலந்துகொள்ள பள்ளிப்படிப்பு 10ம் வகுப்பு, பிளஸ்2 முடித்தவர்கள் 3.07.2004 முதல் 03.07.2008 வரை பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். டிப்ளமோ, பிஎஸ்சி பார்மசி, முடித்தவர்கள் 3.07.2001 முதல் 03.07.2006 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் திருமணமாகாத இந்திய ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். பள்ளிப்படிப்பில் பிளஸ்2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ, பிஎஸ்சி பார்மசி முடித்தவர்கள் பிளஸ்2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள இளைஞர்கள் https://airmanselection.cdac.in/ இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். எனவே வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெறலாம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் appeared first on Dinakaran.