×

ஆங்கிலம் பேசுவதில் இந்தியா முன்னிலை: உலக சராசரியை மிஞ்சியது

புதுடெல்லி: பியர்சன் நிறுவனம் உலக நாடுகளின் ஆங்கிலப் புலமை குறித்து ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் வெர்சன்ட் தேர்வு மூலம் இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதன்படி, பியர்சன் நிறுவனம் தற்போது வெளியிட்ட 2024ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியா ஆங்கிலம் பேசுவதில் உலக சராசரியை மிஞ்சி உள்ளது. ஆங்கிலம் பேசுவதில் இந்தியா 57 மதிப்பெண் பெற்றுள்ளது. இதில் உலக சராசரி 54 மதிப்பெண்ணாகும். ஆங்கிலத்தில் எழுதும் திறனுக்கான பிரிவில் இந்தியாவின் சராசரி மதிப்பெண் (61), உலக சராசரிக்கு இணையாக உள்ளது.

ஆங்கிலத் திறன் பிரிவில் இந்தியா 52 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், உலக சராசரி 57 மதிப்பெண். ஆங்கில பேச்சுப் புலமையில், இந்தியாவில் அதிகபட்சமாக தலைநகர் டெல்லி 63 மதிப்பெண்ணுடன் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் (60), பஞ்சாப் (58) மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 52 மதிப்பெண்களுடன் 6வது இடத்தில் உள்ளது. ஆங்கிலம் பேசுவதில் நிதி மற்றும் வங்கித் துறை 63 மதிப்பெண்ணுடன் முதல் இடத்தில் உள்ளது. ஐடி மற்றும் பிபிஓ துறைகள் தலா 57 மதிப்பெண்ணுடன் 4ம் இடத்தை பகிர்ந்துள்ளன.

The post ஆங்கிலம் பேசுவதில் இந்தியா முன்னிலை: உலக சராசரியை மிஞ்சியது appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Pearson ,Versant ,Pearson… ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அழைத்து...