×

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது: மசோதாவின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு இன்று விளக்கம்

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 17 ஆம் தேதி ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேத்வால் நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரீசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இதை தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் 27 மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய 39 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பாஜக எம்.பி பி.வி சௌத்திரி தலைவராக உள்ள இந்த குழுவில் பிரியங்கா காந்தி, திமுக சார்பில் பி. வில்சன், செல்வகணபதி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல்தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மசோதாவின் விதிகள் குறித்து சட்டத்துறை அதிகாரிகள் குழுவின் உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். அதை தொடர்ந்து மசோதாவின் சாதக, பாதகங்கள் குறித்து உறுப்பினர்கள் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளனர்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது: மசோதாவின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு இன்று விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Parliamentary Joint Committee on One Nation ,One Elections ,Delhi ,One ,Elections ,One Nation ,Parliamentary Joint Committee on One Nation, ,Dinakaran ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...