×

வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அழைத்து சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வைத்த கும்பல் தலைவன் வீட்டில் என்ஐஏ ரெய்டு

புதுடெல்லி: லாவோஸ் நாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி சுற்றுலா விசாவில் இந்தியாவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சைபர் அடிமைகளாக நடத்தி அவர்கள் மூலம் பல்வேறு மோசடிகளை சில கும்பல்கள் செய்து வந்துள்ளன. இது பற்றி தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

ஆள் கடத்தல் மற்றும் சைபர் அடிமை வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டவரான டெல்லி ஜமியா நகரை சேர்ந்த கம்ரான் ஐதர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கம்ரான் ஐதரின் வீட்டில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி செல்போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளை கைப்பற்றினர்.

 

The post வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அழைத்து சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வைத்த கும்பல் தலைவன் வீட்டில் என்ஐஏ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : NIA ,New Delhi ,India ,Laos ,
× RELATED பெற்றோர் உறவு குறித்து சர்ச்சை...