×

ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பாதயாத்திரை பக்தர்கள் நடைபாதை சீரமைப்பு

ஒட்டன்சத்திரம், ஜன. 6: ஒட்டன்சத்திரம் பகுதியில் நகராட்சி சார்பில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதை சீரமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கல், மண் மற்றும் புதர் மண்டி கிடந்த நடைபாதையை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுறுத்தினார்.

இதன்பேரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதையை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏர் கம்ப்ரசர் வாகனம் மூலம் பழனி சாலை, திண்டுக்கல் சாலைகளில் உள்ள நடைபாதைகளில் இருந்த கல், மண் மற்றும் புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இப்பணியை நகராட்சி சுகாதர ஆய்வாளர் ராஜமோகன் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

The post ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பாதயாத்திரை பக்தர்கள் நடைபாதை சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ottanchathram ,Municipality ,Palani ,Dindigul district ,Ottanchathram Municipality ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட செஸ் போட்டி