- வலங்கைமான்
- ஆடிச்சமங்கலம்
- சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம்
- திருவாரூர் மாவட்டம்
- கலெக்டர்
- சாரு
- திருவாரூர் மாவட்டம்…
- தின மலர்
வலங்கைமான், ஜன. 8: வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட ஆதிச்ச மங்கலம் கிராமத்தில் ஆறாவது சுற்று கோமாரி தடுப்பூசி நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு போடப்பட்டது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஆலோசனைப்படி, சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முன்னதாக திருவாரூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்த நிலையில் ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் வேதாம்பரை ஆதிச்சமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் இருக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று நேற்று தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 6வது சுற்று கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 100 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் சக்திவேல் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். இந்த தடுப்பூசி முகாம் ஜனவரி 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடை பெற உள்ளது. அனைத்து வயது மாடுகள், 4 மாதம் அதற்கு மேற்பட்ட கன்று குட்டிகள் மற்றும் சினை மாடுகளுக்கும் போட்டு கொள்ள வேண்டும். எனவே அனைத்து கால்நடை வளர்ப்போரும் தவறாமல் தாங்கள் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
The post வலங்கைமான் அருகே கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.