- டிரம்ப்
- எங்களுக்கு
- யோர்க்
- நியூயார்க்
- நியூயார்க் நீதிமன்றம்
- டொனால்ட்
- ஜனாதிபதி
- ஐக்கிய
- மாநிலங்களில்
- தின மலர்
நியூயார்க்: வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் நிலையில், அவர் மீதான நிதி முறைகேடு வழக்கில் 10ம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என்று நியூயார்க் நீதிமன்ற அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், வருகிற 20ம் தேதி நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் கூட, அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே சட்ட ரீதியிலான பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த காலகட்டத்தில், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் அவர் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்தது. அதாவது தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 லட்சம் டாலர்களை 2016ம் ஆண்டுக்கான தேர்தல் பிரசார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக 11 இன்வாய்ஸ், 11 காசோலை மற்றும் 12 வவுச்சர் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அந்த 34 ஆவணங்களும் போலி என்பதை ஜூரிகள் கண்டறிந்தனர். அதையடுத்து அவர் குற்றவாளி என்றும் அறிவித்தனர். இவ்வழக்கின் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்ச்சென் பிறப்பித்த உத்தரவில், ‘டிரம்பிற்கு எதிரான வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு மற்றும் தண்டனை விபரங்கள் வெளியிடப்படும்’ என்று அறிவித்துள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவு, அமெரிக்கா அதிபராக பதவியேற்கவிருக்கும் டிரம்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவரது கட்சியான குடியரசு கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், டிரம்ப் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்கின்றனர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும், நீதிமன்ற தீர்ப்பின் போது அவர் நேரிலோ அல்லது காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியாகிலும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால், தண்டனை பெற்ற ஒருவர் அதிபராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தண்டனை பெற்ற அதிபராக முதன் முறையாக டிரம்ப் பதவியேற்க உள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் டிரம்ப் பதவியேற்பதற்கோ அல்லது அவரது தலைமையிலான அரசுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் அதிபராக பதவியேற்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நீதிமன்றத்தின் மூலம் டிரம்ப் தண்டனை பெறுவது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கும் நிலையில் நிதி முறைகேடு வழக்கில் டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை: நியூயார்க் நீதிமன்ற அறிவிப்பால் அரசியல் பரபரப்பு appeared first on Dinakaran.