- வலதுசாரி கட்சி
- ஆஸ்திரியா
- வியன்னா
- வலதுசாரி சுதந்திரக் கட்சி
- ஹெர்பர்ட் கிக்ல்
- ஜனாதிபதி
- கார்ல் நெஹாம்மர்
- ஆஸ்திரிய மக்கள் கட்சி…
- தின மலர்
வியன்னா: ஆஸ்திரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வலதுசாரி ஆதரவு ஹெர்பர்ட் கிக்ல் தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது. 28.8 சதவீத வாக்குகளை பெற்றது.
அதிபர் கார்ல் நெஹாமரின் பழமைவாத ஆஸ்திரிய மக்கள் கட்சியை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது. எனினும் அக்டோபரில் அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், நெஹாமருக்கு புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். ஆனால் நெஹாமர் கட்சி சுதந்திர கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. தீவிர வலதுசாரி கட்சி இல்லாமல் ஆளும் கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து சனியன்று நெஹாம்மர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் சுதந்திர கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அதிபர் மாளிகையில் ஹெர்பர்ட் கிக்ல் அதிபர் வான் டெர் பெல்லனை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து புதிய அரசை அமைப்பதற்கு மக்கள் கட்சியுடன் சுதந்திர கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
The post ஆஸ்திரியாவில் ஆட்சி அமைக்க வலதுசாரி கட்சி முயற்சி appeared first on Dinakaran.