×

மாலத்தீவு அதிபருடன் இந்திய தூதர் சந்திப்பு

மாலே: புதிதாக நியமிக்கப்பட்ட மாலத்தீவுக்கான இந்திய தூதர் ஜி. பாலசுப்பிரமணியன் நேற்று அதிபர் முகமது முய்சுவை சந்தித்து பேசினார். மாலத்தீவுக்கான இந்திய தூதராக இருந்த முனு மகாவர் கடந்த நவம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, மூத்த ஐஎப்எஸ் அதிகாரி ஜி.பாலசுப்ரமணியனை புதிய தூதராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில் புதிய தூதர் பாலசுப்ரமணியன் நேற்று மாலேயில் அதிபர் முகமது முய்சுவை அதிபர் அலுவலகத்தில் சந்தித்து தனது நியமன சான்றுகளை வழங்கினார். அப்போது இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது பற்றி அதிபருடன் முய்சுவுடன் பாலசுப்ரமணியன் பேசினார்.முன்னதாக,மாலேவுக்கு வந்த பாலசுப்ரமணியனுக்கு அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்து அதிபர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

The post மாலத்தீவு அதிபருடன் இந்திய தூதர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Maldives ,President ,G. Balasubramanian ,Mohamed Mujibur Rahman ,Munu Mahawar ,IFS ,Indian ,Dinakaran ,
× RELATED மன்மோகன்சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்