ராமநாதபுரம், ஜன. 4: ராமநாதபுரம் அருகே உள்ள கரையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாள் விழா தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை மெர்சி ஆஞ்சலா தலைமை வகித்தார். ஆசிரியர் சசிக்குமார் வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் பேசினார். வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் நித்ய ஈஸ்வரி நன்றி கூறினார்.
The post வேலு நாச்சியார் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.