×

மூணாறு அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மூணாறு, ஜன.9: மூணாறு அருகே சாலையோர கடைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள பள்ளிவாசல் இரண்டாம் மைல் பகுதியில், கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, சாலையோர கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தேவிகுளம் துணை ஆட்சியர் வி.எம்.ஜெயகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இதன் படி பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டாம் மைல் பகுதியில் நெடுஞ்சாலையோரம் இயங்கி வந்த பெட்டி கடைகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் கடைகளை அகற்றவில்லை. இதனால் நேற்று தேவிகுளம் தாசில்தார் ஹரிகுமாரின் தலைமையில் பள்ளிவாசல் ஊராட்சிக்குட்பட்ட இரண்டாம் மைல் உட்பட தேசிய நெடுஞ்சாலையோரம் இயங்கி வந்த 44 கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. மேலும் வரும் நாட்களிலும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

The post மூணாறு அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Pallivasal ,Kerala ,Kochi- ,Dhanushkodi National Highway ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே குண்டளை அணையில் படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்