×

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் மீது வழக்கு

திருப்பூர், ஜன.9: திருப்பூர், போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞான அகஸ்தியன் (30). இவர், பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், 2வதாக பரமேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்நிலையில் போதைக்கு அடிமையான ஞான அகஸ்தியன் மது குடித்து விட்டு பரமேஸ்வரியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், முதல் மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றது குறித்து ஞான அகஸ்தியனுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஞான அகஸ்தியன், பரமேஸ்வரியை கல்லால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த பரமேஸ்வரி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து ஞான அகஸ்தியனிடம் விசாரித்து வருகின்றனர்.

The post மனைவியை கல்லால் தாக்கிய கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Gnana Agasthyan ,Boyampalayam ,Banyan ,Parameswari ,
× RELATED நொய்யல் ஆறு தூர்வாரும் பணி;...