- அரசு பல் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா
- அமைச்சர்கள்
- மா. சுப்பிரமணியன்
- சேகர்பாபு
- சென்னை
- தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- அரசு பல் கல்லூரி
- விழா
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 67 வது பட்டமளிப்பு விழாவில் மருத்துவமனையின் 2024ம் ஆண்டின் வளர்ச்சி பணிகள் பற்றிய செய்தி மடலை வெளியிட்டு மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு நேற்று சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இம்மருத்துவமனையில் ரூ.25.31 லட்சம் செலவில் குடிநீர், சலவையகம், உணவு அருந்தும் இடம், கலையரங்கம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ரூ.4.31 கோடி செலவில் கல்லூரியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்தவும், மருத்துவ மாணவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதற்காகவும், நவீன உபகரணங்கள் வாங்க அரசாணை வெளியிடப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் ரூ.13.60லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த இம்பிளான்ட் சிகிச்சை மையம், ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் இணைய வழி நூலகம் ஆகிய வசதிகளை தொடங்கி வைக்கவுள்ளோம்.
The post அரசு பல் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வழங்கினர் appeared first on Dinakaran.