×

நடிகர் விஷால் உடல்நிலை: மேலாளர் விளக்கம்

சென்னை: சமீபத்தில் நடந்த மதகஜராஜா ப்ரோமோஷன் நிகழ்வில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கையில் மைக்கை பிடித்து விஷாலால் பேசவே முடியவில்லை, கை நடுங்கிக் கொண்டே இருந்தது. படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடன் விஷால் வந்ததது தெரியவந்தது. இந்நிலையில் நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார். ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்.

The post நடிகர் விஷால் உடல்நிலை: மேலாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vishal ,Chennai ,Madagajaraja ,
× RELATED நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை!