- கன்னியாகுமரி வரலாற்று மற்றும் கலாச்சார ஆய்வு மையம்
- திருவள்ளுவர்
- கன்னியாகுமாரி
- கன்னியாகுமரி பூம்புகார்
கன்னியாகுமரி, ஜன.3: கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி பூம்புகார் படகு போக்குவரத்து நடைபெறாததால் கப்பல் துறையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்திற்கு அனைத்து தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட தினத்தையொட்டி நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர் காந்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், தென்குமரி கல்விக்கழக செயலாளர் வக்கீல் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தி.கோ. நாகேந்திரன் தலைமை வகித்தார். தமிழ் அறிஞர் சிதம்பர நடராஜன், புலவர். ராமசாமி, புலவர் சிவதாணு, ஆசிரியர் பா,இளங்கோ, இளங்கோ, கி.கண்ணன், செல்வகுமார் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
The post கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.