×

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி

 

திருவாரூர். ஜன. 5: திருவாரூ ரில் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த தினத்தினை யொட்டி நடைபெற்ற சைக் கிள் போட்டியை கலெக்டர் சாரு துவக்கிவைத்தார்.முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த தினத்தினை கொண்டாடும் வகையில் தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான மிதிவண்டி போட்டியானது திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதனை திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகிலிருந்து கலெக்டர் சாரு துவக்கிவைத்தார்.

13 -வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிமீ துரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரத்திற்கும் நடத்தப்பட்ட இப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது சைக்கிளுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், கமிஷனர் தாமோதரன், நகராட்சி நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், மாவ ட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி appeared first on Dinakaran.

Tags : Perarigna Anna Birthday Cycle Competition ,Thiruvarur ,Collector ,Saru ,Perarigna Annadurai ,Chief Minister ,Tamil Nadu Sports Development Authority ,District… ,Dinakaran ,
× RELATED கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு...