×

திருச்சியில் 3 டூவீலர்கள் திருட்டு

 

திருச்சி, ஜன.5: திருச்சியில் 3 டூவீலர்களை திருடிய கும்பலை போலீசார் தேடுகின்றனர். திருச்சி அரியமங்கலம், காமராஜ் நகர், கலாம் ஆசாத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவர் டிச.31ம் தேதி டூவீலரை அம்பிகாபுரம் டாஸ்மாக் அருகே நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, பைக் மாயமானது. இதேபோல் அம்பிகாபுரம், லுாயில் நகரைச் சேர்ந்தவர் அரவண்(41). இவர் டிச.28ம் தேதி தனது டூவீலரை அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் அருகே நிறுத்தி வைத்திருந்தது மாயமானது.

இந்த இரு வழக்குகள் குறித்தும் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி மேலபுதுார், ராவுத்தர் பேட்டையை சேர்ந்தவர் முகமது ரபீக் (52). இவர் ஜன.1ம் தேதி தன் இருசக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தென்னை வாரியம் இக்கூட்டத்தில், தமிழகத்தில் தென்னை வாரியம் அமைக்க வேண்டும். மக்காச்சோள விவசாயிகளை காப்பாற்ற கொள்முதல் நிலையம் அமைத்து தமிழக அரசு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

The post திருச்சியில் 3 டூவீலர்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Suresh ,Kalam Azad Street, Kamaraj Nagar, Ariyamangalam, Trichy ,Ambikapuram TASMAC ,
× RELATED கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில்...