×

தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாமகவினர் 78 பேர் கைது

கடத்தூர், ஜன.3: சென்னையில் கைது செய்யப்பட்ட பசுமை தாயகத்தின் மாநில தலைவர் சௌமியாவை விடுதலை செய்யக்கோரி, தர்மபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் தலைமையில், கடத்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முத்துசாமி, முருகன், அண்ணாதுரை, கோன்ரி சிவன், கலைமணி, செல்வம், சின்னராஜ், பூமணி, விக்னேஷ், ஆறுமுகம், முத்து, கணேசன், முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் முன்பு, உழவர் பேரியக்க மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் தமிழ்வாணன் தலைமையில், பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொம்மிடியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகி சிவக்குமார், 4 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாமகவினர் 78 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : 78 PMK ,Kadtur ,Dharmapuri East District PMK ,Secretary Govt ,Green Homeland ,State ,President ,Soumya ,Chennai ,Muthusamy ,Murugan ,Annadurai ,Konri Sivan ,Dinakaran ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது