×

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தவறவிட்ட 20 கிராம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

செங்கோட்டை,ஜன.1: தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஒரு பர்ஸ் அனாதையாக கிடந்தது. அதை சுவாமி கும்பிடச்சென்ற புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த கடற்கரை என்பவர் எடுத்து திறந்து பார்த்தார். அப்போது அந்த பர்சில் மொத்தம் 20 கிராம் மதிப்புள்ள தங்க நகை இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பர்சை கடற்கரை, அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தங்கநகையுடன் கிடந்த பர்சை மீட்டு நேர்மையாக ஒப்படைத்த கடற்கரையை போலீசார் பாராட்டினர். மேலும் கோயிலில் நகையை தவறவிட்ட நபர், அச்சன்புதூர் போலீஸ் நிலையம் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில் நகையை தவறவிட்டது கல்லிடைக்குறிச்சி இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சிவச்செல்வி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவச்செல்வி தவறவிட்ட நகையை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சிவச்செல்வியிடம் ஒப்படைத்தார்.

The post பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தவறவிட்ட 20 கிராம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Swami Temple ,Chengottai ,Purozhi ,Thirumalaikumaraswamy ,Temple ,Tenkasi District ,Puliangudi Sinthamani ,Swami ,Purozhi Thirumlaikumara Swami Temple ,
× RELATED தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி...