×

தஞ்சை தமிழ் பல்கலை பிரச்னை அடுத்த வாரம் சிண்டிகேட் கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக (பொ) சங்கரும், பதிவாளராக (பொ) தியாகராஜனும் செயல்பட்டு வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் நீக்கியதாக ஆணை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதிய பதிவாளர் பேராசிரியர் வெற்றிச்செல்வன் பொறுப்பேற்க வந்தபோது, பதிவாளர் அறையை தியாகராஜன் பூட்டியதாக கூறப்படுகிறது. பூட்டை உடைத்து அவர் பொறுப்பேற்றார். அடுத்த வாரம் தமிழ் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் சென்னையில் கூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என தெரிகிறது.

The post தஞ்சை தமிழ் பல்கலை பிரச்னை அடுத்த வாரம் சிண்டிகேட் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Tamil University ,Thanjavur ,Sankar ,Thiagarajan ,Vetriselvan ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்