×

களம் காத்திருக்கிறது புத்தாண்டை வரவேற்போம்:துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
2004ம் ஆண்டு பல்வேறு புதுமைகளையும் அனுபவங்களையும் நினைவுகளையும் நமக்குத் தந்துவிட்டு விடைபெறுகிறது. 2025ம் ஆண்டு புத்தாண்டில், முக்கடல் கூடும் குமரியில் நம் திராவிட மாடல் அரசு நடத்திய திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிலிருந்து தொடங்குகிறது. முதல்வர் தலைமையிலான ‘திராவிட மாடல் அரசு 2024ல் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

2024ன் தொடக்கத்திலேயே லட்சோப லட்சம் இளைஞர்கள் பங்கேற்புடன் இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் வகையில், மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் இளைஞர் அணியின் மாநில மாநாட்டை நடத்தியதை நினைத்துப் பார்க்கிறோம். 2024 மக்களவைத் தேர்தல் களத்தில், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் பாசிச சக்திகளையும் அடிமைகளையும் வீழ்த்தி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் நம் கழகம் பாதுகாத்தது.
புதிய உத்வேகத்துடன் பிறக்கும் 2025ம் ஆண்டிலும் தொடரும். தமிழ்நாட்டின் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். இது கலைஞர் உழைப்பால் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் வியர்வையால், தியாகத்தால் உண்டான பந்தம். புழுதிகளால் சூரியனை மறைக்க முடியாது. 2026ல் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் பெறவிருக்கும் மாபெரும் வெற்றிக்கு 2025ம் ஆண்டு நாம் ஆற்றப் போகும் களப்பணி ஆதாரமாக விளங்கட்டும்.

தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச் சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் காட்டிய சமூகநீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என்ற முற்போக்குப் பாதையில் தொடர்ந்து தலைவரின் கரம் பற்றி நாம் பயணிப்போம். என்கிற உறுதியோடும், நம்பிக்கையோடும் புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

The post களம் காத்திருக்கிறது புத்தாண்டை வரவேற்போம்:துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,model government ,Thiruvalluvar ,
× RELATED தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்:...