×

கருப்பு துப்பட்டா பறிமுதல் விவகாரம் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது: பெருநகர காவல் துறை விளக்கம்

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை: நேற்று (ஜன.5ம் தேதி) எழும்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழா நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல், பாதுகாப்பு சென்னை காவல் பிரிவினர் விழா நடக்கும் உள் அரங்கிற்குள், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும் போது. கருப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம். கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.

இந்நடவடிக்கை அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது என தெரியவருகிறது. இனி அவ்வாறு நிகழாவண்ணம் இருப்பதற்கு பாதுகாப்பு சென்னை காவல் பிரிவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

 

The post கருப்பு துப்பட்டா பறிமுதல் விவகாரம் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது: பெருநகர காவல் துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BLACK DUPATTA ,METROPOLITAN POLICE DEPARTMENT EXPLANATION ,Chennai ,Chennai Metropolitan Police ,Raumpur ,Metropolitan ,Security Police Department Ceremony ,Chennai Police Department Ceremony ,Dupatta ,Metropolitan Police Department ,Dinakaran ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...