திருப்பூர், ஜன.1: திருப்பூர் ஊத்துக்குளி சாலை குளத்துபாளையம் அருகே ஏராளமான சாலையோர காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. காலை முதல் இரவு வரை வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இரவு சாலை ஓரமாகவே கடைகள் தார்ப்பாய் கொண்டு பூட்டப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று அதிகாலை குளத்துப்பாளையம் அருகே உள்ள சாலையோர காய்கறி கடையில் இருந்த எடை இயந்திரம் இல்லாததை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது நேற்று அதிகாலை கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் லாவகமாக தார்ப்பாயினை விளக்கி அதற்குள் இருந்த எடை இயந்திரத்தை வெளியே எடுத்துள்ளார். தொடர்ந்து சாலையோர கடையில் இருந்த பையினை எடுத்து அதில் எடை போடும் இயந்திரத்தை வைத்து தூக்கிச் சென்றுள்ளது பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரக்கூடிய நிலையில் இச்சம்பவம் குறித்து வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சாலையோர கடையில் இருந்த எடை போடும் இயந்திரத்தை திருடிச் சென்ற மர்ம நபர் appeared first on Dinakaran.